26 ஜூன், 2013

கண்ணாடி பேழையுள்... என் தேவதை


கண்ணாடி பேழையுள்
தனியாக ஆடும்
தேவதையே

     உன்னோடு நானும்
     பண் பாட வேண்டும்
     வா வெளியே

கொண்டாட்டம் என்ன
உன்னோடு மட்டும்
மல்லிகையே

     என்னோடு சொன்னால்
     ரெண்டாகும் சந்தோஷம்
     சொல்லடியே

கட்டாயம் அல்ல
தனியாய் நர்த்தனம்
நீ செய்ய

     நீயில்லை என்றால்
     சந்நியாசம் கொள்வேன்
     வேறென்ன சொல்ல

கைகோர்த்துக் கொள்ள
காத்திருக்கிறேன்
ரோஜாக்கள் கொண்டு

     நீ வந்து சென்றால்
     நன்நாளாம்
     என் வாழ்வில் இன்று

நிலவும் இன்று
மறைந்து போனது
உன்னை காணாமலே

     கரிசனம் கொண்டு
     காரிருள் போக்க
     வா வெளியே

தென்றல் இங்கு
கொதித்திருக்குது
யார் கொடுத்த சாபமோ

     வந்து நில்லடி
     தீண்டட்டும் உன்னை
     விமோட்ச்சனம் கொள்ளவே

பூமி சுற்றுது
இரவும்.. பகலும்..
மாறி வந்து செல்ல

     நீ சுற்றவே
     இரவும் பகலாகி
     பூமி நின்றதென்ன

கண்ணாடிக்குள்
உன்னைகட்டுப்ப்டுத்தியது யாரு
பெண் சுதந்திரத்தைஇங்குவெட்டிப்பறித்தாரு

     உடைத்துக் கொண்டு வா
     புதுமைப் பெண்னை
     உலகம் காண வா