26 ஜூன், 2013

Happy New Year


இறந்த நொடியில்
மீண்டும் பிறக்கும்
ஆங்கிலத் தாயின் செல்லப் பிள்ளை
New Year (january 1)

என் தமிழ்த்தாயின் சக்களகத்தி
என்றாயினும்
பாசமுண்டு எனக்கு
ஆங்கிலத்தின் மீது

 நடு இரவில்
நண்பர்கள் படைசூழ
நல்ல தமிழ் மறந்து
நல்வாழ்த்துக்கள் பறிமாரிக்கொள்ள
மறந்ததில்லை...

ஆயினும்.. அவன் இறந்த காரணமோ
மீண்டும் பிறந்த நோக்கமோ
அறிய மறந்து போனது
என்ன நியாயம்..

 உலக மக்களின் வறுமைக்கும்
சமூக சீர்கேட்டிற்க்கும்
தான் பிறந்த நேரம்
காரணமென்ற மூடநம்பிக்கையில்
இறந்து போனானோ !

என்றாவது பிறக்கும்... நல்லகாலம்
என்ற ஏழை மக்களின்
கனவிற்க்காக
மீண்டும் பிறந்தானோ !

அது, இது, எதுவாயினம் காரணம்..
கொண்டாட்டம் மட்டும்
உறுதியானது.. அவன்
பிறந்த நாளன்று

நாளைய சிந்தனையை
தூக்கியெறிந்து
பறிமாறிக்கொள்ளாதே
நல்வாழ்த்துக்கள்

பிறக்கட்டும் உன்னில்
நல்ல சிந்தனையின்று
புதுவருடமும் சேர்ந்து சொல்லும்
உனக்கு

Happy New Year.

கருத்துகள் இல்லை: