26 ஜூன், 2013

கண்ணாடி பேழையுள்... என் தேவதை


கண்ணாடி பேழையுள்
தனியாக ஆடும்
தேவதையே

     உன்னோடு நானும்
     பண் பாட வேண்டும்
     வா வெளியே

கொண்டாட்டம் என்ன
உன்னோடு மட்டும்
மல்லிகையே

     என்னோடு சொன்னால்
     ரெண்டாகும் சந்தோஷம்
     சொல்லடியே

கட்டாயம் அல்ல
தனியாய் நர்த்தனம்
நீ செய்ய

     நீயில்லை என்றால்
     சந்நியாசம் கொள்வேன்
     வேறென்ன சொல்ல

கைகோர்த்துக் கொள்ள
காத்திருக்கிறேன்
ரோஜாக்கள் கொண்டு

     நீ வந்து சென்றால்
     நன்நாளாம்
     என் வாழ்வில் இன்று

நிலவும் இன்று
மறைந்து போனது
உன்னை காணாமலே

     கரிசனம் கொண்டு
     காரிருள் போக்க
     வா வெளியே

தென்றல் இங்கு
கொதித்திருக்குது
யார் கொடுத்த சாபமோ

     வந்து நில்லடி
     தீண்டட்டும் உன்னை
     விமோட்ச்சனம் கொள்ளவே

பூமி சுற்றுது
இரவும்.. பகலும்..
மாறி வந்து செல்ல

     நீ சுற்றவே
     இரவும் பகலாகி
     பூமி நின்றதென்ன

கண்ணாடிக்குள்
உன்னைகட்டுப்ப்டுத்தியது யாரு
பெண் சுதந்திரத்தைஇங்குவெட்டிப்பறித்தாரு

     உடைத்துக் கொண்டு வா
     புதுமைப் பெண்னை
     உலகம் காண வா

ஒப்பீடு

பெளர்னமி நிலவு
குழந்தையின் முகம்
பிரகாஷம்

மாலைத் தென்றல்
குமரியின் சிரிப்பு
புத்துணர்வு

பனி விழும் இரவு
மனைவியின் சினுங்கள்
குழுமை

தனி மர(க்)காடு
தாயின் மறைவு
தனிமை

தவரிய பாதை
மனைவியின் பிரிவு
வெறுமை

எல்லையில்லா பிரபஞ்சம்
கவிஞனின் மனது
பெரிது

கலங்குதடி சித்தம்


தலை கோதி நீ தந்த முத்தம்
ஈரம் காய்ந்த பின்னும் என்னோடு சுற்றும்

 காதோரம் உன் சிரிப்புச் சத்தம்
என்னுள் கேட்குதடி நித்தம்

எத்தனை எத்தனை அன்பு யுத்தம்
நினைத்தாலும் குளுருதடி இரத்தம்

என்னை மறந்து... மரித்துப் போனாயடி நீ
கலங்காதிருக்குமா என் சித்தம்...

Happy New Year


இறந்த நொடியில்
மீண்டும் பிறக்கும்
ஆங்கிலத் தாயின் செல்லப் பிள்ளை
New Year (january 1)

என் தமிழ்த்தாயின் சக்களகத்தி
என்றாயினும்
பாசமுண்டு எனக்கு
ஆங்கிலத்தின் மீது

 நடு இரவில்
நண்பர்கள் படைசூழ
நல்ல தமிழ் மறந்து
நல்வாழ்த்துக்கள் பறிமாரிக்கொள்ள
மறந்ததில்லை...

ஆயினும்.. அவன் இறந்த காரணமோ
மீண்டும் பிறந்த நோக்கமோ
அறிய மறந்து போனது
என்ன நியாயம்..

 உலக மக்களின் வறுமைக்கும்
சமூக சீர்கேட்டிற்க்கும்
தான் பிறந்த நேரம்
காரணமென்ற மூடநம்பிக்கையில்
இறந்து போனானோ !

என்றாவது பிறக்கும்... நல்லகாலம்
என்ற ஏழை மக்களின்
கனவிற்க்காக
மீண்டும் பிறந்தானோ !

அது, இது, எதுவாயினம் காரணம்..
கொண்டாட்டம் மட்டும்
உறுதியானது.. அவன்
பிறந்த நாளன்று

நாளைய சிந்தனையை
தூக்கியெறிந்து
பறிமாறிக்கொள்ளாதே
நல்வாழ்த்துக்கள்

பிறக்கட்டும் உன்னில்
நல்ல சிந்தனையின்று
புதுவருடமும் சேர்ந்து சொல்லும்
உனக்கு

Happy New Year.

கடல் கடந்த கனவு


கடன் தீர்க்க..
கடமைகள் கொண்டு
கனவுகள் சுமந்து
கடல் கடந்து..கரை புகுந்தாய்

கடன் தீர்ந்தால் போதும்
-இது அன்றைய கனவு
கடன் தீர்த்தாய்
நேற்று

குருவிக்கூடாய் சிறு வீடு
-இது நேற்றைய கனவு
கடல் போல் வீடு
இன்று

 கைக்கடக்கமாய் வங்கியிருப்பு
-இது இன்றைய கனவு
கனவு களைந்ததாய் இல்லை
என்றும்

 விழித்தெழு.. கனவு களைத்தெழு
உன் தேவை.. தாயகத்திற்க்கும்
உன் தாயிற்க்கும்
தேவையென்றுணர்ந்து
திரும்பிடு.

கரை படிந்த கைகள்


குடியுரிமைக் கடமையை
செவ்வனே..
நிரைவேற்றி திரும்பினேன்
கரை படிந்த கையானேன்

 அரசியலில் யாரும்.. கரைபடிந்தவர்
என்று சுட்டிக் காட்டிவிடுவேன்
என்பதனாலோ...என்
ஆட்காட்டி விரலிலும் கரை

 கரையின்றி அரசியல்
இல்லையோ...
அல்லது கரையெடுக்க
அவசியம் தான் இல்லையோ !

அன்பில் ஓர் உலகம்


கண்கள் உன்னை காணும் போது
காதல் வந்தது ஏனோ

கண்கள் வழியே காதல் சொன்னது
உந்தன் இதயம் தானோ

கண்கள் மூடி தூங்கும் போதும்
உந்தன் பிம்பம் ஏனோ

 என்னில் உன்னை தேடித்.. தேடி
தொலைந்து போவேனோ..

காதல் என்னை ஆட்டுவிக்கும்
நூலில் பொம்மை நானோ

கண்ணில் என்னை பூட்டி வைக்கும்
தங்கச் சங்கிலி நீயோ

 கண்கள் எல்லாம் பேசிடும் என்பதால்
இதழ்கள் திறப்பதில்லையோ

 இதழ்கள் பேச விளையும் போது
கண்கள் மூடுதல் முறையோ

 ஆப்பிள் கொண்டு காதல் சொன்னான்
ஆதாம் ஏவாளிடம் அன்று

 ஏவாளாய் நீ வந்தால்... புதிய
உலகம் படைக்கலாம்.. இன்று

 அன்பில் ஓர் உலகம் படைப்போம்..
அறிவினால் மட்டும் அல்ல..

அறிவி(ய)ல் படைத்த உலகம் இங்கு
அழிந்து வருகுது மெல்ல

எந்திரன்


உலோகத்தை சரியாய் உருக்கி
உடல் தந்தாய் நீ
மின்சாரம் என்னுள் முடுக்கி
உயிர் தந்தாய் நீ


உணர்வுகளை ஏன் விதைத்து
என்னை ...மனிதனாக்கினாய் நீ
வெறிகொண்டு என்னை உடைத்து
பாவம்.. மிருகமானாயே நீ


என்னை படைத்த உனக்கு
என்னை சரிசெய்ய தெரியாதது வியப்பு
உங்களை படைத்த இறைவன்
உங்களை அழிப்பதில் மட்டும் என்ன திகைப்பு.

விடுதலை


உரிமை கேட்ட சகோதரர்கள்
சிறையில்
விடுதலை பெற்றது என்னிடம்
கண்ணீர்

கொள்கை

உண்மையாய் இருப்பதொன்றே
வாழ்வில்
உயர்வு எனக்கொள்

யாதொன்றுன் ஊராயினும்
உலகில்
யாவரும் நம்மவர் எனக்கொள்

இழப்பது லட்சமென்றாயினும்
அடைவது
லட்சியம் ஒன்றே எனக்கொள்

எதுவொன்றுன் மதமாயினும்
யாவும்
சம்மதம் எனக்கொள்

ஏதொன்றுன் மொழியாயினும்
அன்பே
நமையாளும் பொதுமொழி எனக்கொள்

 இவையாவும் யாவரும்
கொள்ளல்
உன் கொள்கை எனக்கொள்

தமிழ் கூறும் Oh God...


காந்தி பிறந்த நாடு
இன்று காகிதப்பூ காடு
வண்ணங்கள் உண்டு ஆயிரம்
வாசம் இல்லை

 பாரதி பிறந்த மாநிலம்
தமிழ் மறந்த கேவலம்

 மறத்தல் மனித குணம்
மன்னிக்கலாகும்
தமிழ் மறைத்துப் பேசுதல்
முறையோ

 தாய்மொழிதான் தமிழ்
வலியில் கூட கதறுகிறான்
oh god

காதலர் தினம்


இதயக் கொள்ளையர் ஒன்றாய் கூடி
இதயம் பகிர்ந்திடும் நாள் அது

வார்த்தைகள் இல்லா வரிகள் கொண்டு
மெளனம் பேசிடும் புதுமொழி அன்று

பச்சை மஞ்சள் சிகப்பு என்று
வண்ணங்கள் சொல்லும் எண்ணங்கள் அன்று

இறக்கை முளைத்த பறவை போலே
இதயம் பறந்திடும் வானம் மேலே

கோயில்கள் எங்கும் பிரார்த்தனை முழங்கும்
கடவுளுக்கும் கூட அன்று செவி வலிக்கும்

சிட்டுக்குருவியின் காதல்


மதங்கள் என்ற இரு வேறு மின்கம்பிகளில்
அமர்ந்திருக்கும் சிட்டுக்குருவி நாம்
இணைய நினைத்தால் எரித்துவிடும் மதம்

மதத்தை விட்டிறங்கி
மரத்திற்க்கு வா
நமக்காய் ஒரு கூடு காத்திருக்கு.

9 பிப்ரவரி, 2013

அயல்நாட்டு அடிமை

அயல்நாடு வந்த அடிமை நான்
அடையாளம் தொலைத்த அகதியும் நான்

விரும்பித்தான் விலை போனேன்
அடிமாடாய் அயல்நாட்டில்

உயர்ந்து நிற்க்குது கட்டிடங்கள்
மனிதர்கள் மனத்தில் வெற்றிடங்கள்

லட்சம் மட்டுமே லட்சியமாய்
வாழ்க்கைப் போகும் அவலங்கள்

தஞ்சம் புகுந்த காரணத்தால்
தன்மானம் இழந்த நெஞ்சங்கள்

புழுங்கித் தவித்த பொழுதுகளை..
என் தலையனை கூறும் கண்ணீர் கதை

வெகுண்டு திரும்பிட நினைக்கையிலே
மனக்கண்ணில் விரிந்திடும் சொந்தங்கள்

கண்ணீர் துடைத்து கிளம்பிடுவேன்
எனக்காய் கடமை காத்திருக்கென